SCHEME

DAILY SAVING SCHEME

1. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.100க்கு மேல் எந்த தொகையையும், எந்த நேரத்திலும் சேமிக்க முடியும். முதல் கட்டணம் செலுத்திய நாளிலிருந்து முதல் 330 நாட்களில் எந்த நேரத்திலும் சேமிக்கலாம்.

2. இத்திட்டம் 330 நாட்களுக்கான திட்டகாலம் முதலில் செலுத்தப்பட்ட தேதியில் தொடங்கும். இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எத்தனை முறைவேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்த நாளிலிருந்து 360 வது நாளில் திட்டம் முதிர்ச்சியடையும்.

3. இத்திட்டத்தின் கீழ் இறுதி 30 நாட்களில் ( அதாவது 331 வது நாள் முதல் 360 வது நாள் வரை ) செலுத்தப்படும் கட்டணங்களுக்கு எந்தப்பலன்களும் வழங்கப்படாது மற்றும் இத்திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் வாடிக்கையாளர்கள் கட்டிய தொகைக்கு நிகரான தங்க நகைகளை 100% சேதாரம், செய்கூலி இல்லாமல் (போனஸ் இல்லமால்) தங்கநகைகள் அன்றை மார்க்கெட் விலைக்கு பெற்றுக்கொள்ளலாம் மற்றும் GST வரி செலுத்த வேண்டும்.

4. இத்திட்டத்தில் கட்டிய தொகைக்கு நிகரான எடைக்கு மேல் நகை தேர்வு செய்யும் பட்சத்தில் அதற்குரிய சேதாரம், செய்கூலி மற்றும் வரி செலுத்த வேண்டும்.

5. வாடிக்கையாளர்கள் முதிர்வு தேதிக்கு முன் விலக விரும்பினால், வாங்கும் தேதியில் மட்டுமே மார்க்கெட் விலை நிர்ணயிக்கப்படும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு திட்ட பலன்கள் வழங்கப்படாது. மேலும் பணமாக திரும்ப பெற இயலாத.

6. வாடிக்கையாளர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி GST 3% வரி செலுத்த
வேண்டும். எதிர்காலத்தில் அரசாங்க வரி விதிப்பு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

7. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் நகையின் மதிப்பு ரூ.2,00,000 மேல்
இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் PAN எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

8. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டும் தொகைக்கு தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு போனஸ் வழங்கப்படாது.

9. பதிவு செய்யும் போது யாருடைய பெயரை பதிவு செய்கிறாரோ அவர் மட்டுமே இத்திட்டத்தை முடிக்க முடியும். திட்டத்தில் பதிவு செய்த நபர் முடக்கப்பட்டிருந்தால் அல்லது காலாவதியாகிவிட்டால். நாமினி உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய அடையாளச்சான்றுகளைச் சமர்பித்து திட்டத்தைப் பெற்றுக்கொள்ளாலாம.

10. இத்திட்டத் தொகையை தங்கம் அல்லது வெள்ளி நகைகளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் திட்டத்தொகை எந்த சூழ்நிலையிலும் பணமாக வாங்கப்படாது. இத்திட்டத்தின் கீழ் ரெடிமேட் தங்க நகைகளை மட்டுமே வாங்க முடியும்.

11. வைரம், அன்கட்வைரம், ஆண்டிக், ரூபி எமரால்டு, ஆண்டிக் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளி செட்டிநாட்டு பாத்திரங்கள், வெள்ளி நகைகள் போன்ற சிறப்பு பொருட்களுக்கு
வாடிக்கையாளர் மதிப்பு கூட்டப்பட்ட கட்டணங்களை (சேதாரம், செய்கூலி, மற்றும் கல் கட்டணம்) செலுத்த வேண்டும்.

12. KYC விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர் ஒரு நாமினியை நியமிக்கலாம். பரிந்துரைக்கப்பட்டவர் 18 வயது பூர்த்தி செய்யவில்லை என்றால் விண்ணப்பப் படிவத்தில் பாதுகாவலரின் பெயர் மற்றும் உறவைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் மற்றும் கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும்.

13. இத்திட்டம் முதிர்வு நேரத்தில் OTP மூலம் வாடிக்கையாளர் மொபைல் எண் மற்றும் கையொப்பங்கள் சரி பார்க்கப்படும்.

14. இத்திட்டத்தை வாடிக்கையாளர் வேறு எந்த நபருக்கும் (அல்லது) உறவினர்களுக்கும் மாற்ற முடியாது.

15. முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் உடனடியாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

16. இந்த தினசரி சேமிப்பு திட்டத்தை வேறு திட்டங்கள். திருவிழா சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் இணைக்க முடியாது.

17. தங்கத்தின் மார்க்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது.

18. எந்த நேரத்திலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றம் செய்ய நிறுவனத்திற்கு
உரிமை உண்டு. சர்ச்சைகள் ஏதேனும் இருந்தால் தேவகோட்டை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
இத்திட்டத்திற்கான தொகையை ஸ்ரீ சங்கர் ஜூவல்லரி மொபைல் ஆப் மற்றும் ஸ்ரீ சங்கர் ஜூவல்லரி இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த இயலும்.

GOLDEN SEED HARVEST SCHEME

1. இத்திட்டத்தின் கீழ் ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் சேர்த்து தங்கநகைகள் பெறலாம். நீங்கள் ஒரு தொகையை மாதந்திர தவணையாக தேர்வு செய்யலாம். ரூ. 500, 1000, 2000, 3000, 5000, 10000, 20000, 30000, 50000/- இத்திட்டத்தில் வாடிக்கையாளர் அனைவரும் கட்டும் தவணையை தங்க எடையாக வரவு வைக்கப்படும்.

2. இத்தங்க விதை அறுவடை திட்டத்தின் கீழ் மாதந்திர தவணைத் தொகை அன்றைய மார்கெட் விலையில் தங்க எடையாக வரவு வைக்கப்படும்.

3. பணம் செலுத்தும் நேரத்தில் தங்கத்தின் அன்றைய மார்கெட் விலையைப் பொறுத்து ஒவ்வொரு தவணைக்கும் தங்கத்தின் எடை மாறுபடலாம்.

4. ஒவ்வொரு தவணைக்கும் இடையே உள்ள மாதந்திர தவணை இடைவெளி 30 நாட்கள் இருக்க வேண்டும்.

5. இத்திட்டத்தில் இணைந்த தேதியிலிருந்து 11 மாத தவணை முடிந்த பிறகுதான் முதிர்ச்சியடையும்.

6. வாடிக்கையாளர்கள் தனது 11வது தவணையை முடித்த பிறகு 30 நாட்களுக்குப் பிறகுதான் தங்க நகைகள் வாங்க முடியும்.

7. இத்திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை சேதாரம், செய்கூலி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட கட்டணங்களில் 50% தள்ளுபடியுடன் சேகரித்த தங்க எடைக்கு நிகரான மதிப்பிற்கு தங்க நகைகளை பெறலாம். (உதாரணமாக தேர்தெடுக்கப்பட்ட தங்கநகைகளுக்கான சேதாரம் 22% ஆக இருந்தால், வாடிக்கையாளர்கள் 11% மற்றும் தயாரிப்புக் கட்டணங்களின் வித்தியாசத்தை செலுத்த வேண்டும் மற்றும் மொத்த தங்க எடைக்கு GST வரி செலுத்த வேண்டும்.)

8. இத்திட்டத்தில் சேகரித்த எடைக்கு நிகரான எடைக்கு மேல் நகை தேர்வு செய்யும் பட்சத்தில் அதற்குரிய சேதாரம், செய்கூலி மற்றும் GST வரி செலுத்த வேண்டும்.

9. வாடிக்கையாளர்கள் முதிர்வு தேதிக்கு முன் விலக விரும்பினால் வாங்கும் தேதியில் மட்டுமே மார்க்கெட் விலை நிர்ணயிக்கப்படும் மற்றும் வாடிக்கைளார்களுக்கு திட்ட பலன்கள் வழங்கப்படாது. மேலும் பணமாக திரும்ப பெற இயலாது.

10. முதல் கட்டணத்தின் போது தவணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டு பின்னர் மாற்ற முடியாது. வாடிக்கையாளர்கள் தேர்தெடுத்த தொகையை 11 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.

11. வாடிக்கையாளர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி 3% GST வரி செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அரசாங்க வரி விதிப்பு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
12. 11 மாத தவணைகளின் மதிப்பு ரூ.2,00,000 மேல் இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் PAN எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

13. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்க நாணயத்தை வாங்க முடியாது.

14. பதிவு செய்யும் போது யாருடைய பெயரை பதிவு செய்கிறாரோ அவர் மட்டுமே இத்திட்டத்தை முடிக்க முடியும். திட்டத்தில் பதிவு செய்த நபர் முடக்கப்பட்டிருந்தால் அல்லது காலாவதியாகிவிட்டால், நாமினி உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய அடையாளச்சான்றுகளைச் சமர்பித்து திட்டத்தைப் பெற்றுக்கொள்ளாலாம்.

15. இத்திட்டத்தில் சேகரித்த எடையை தங்க நகைகளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் திட்டத் தொகை எந்த சூழ்நிலயிலும் பணமாக
வழங்கப்படாது. இத்திட்டத்தின் கீழ் ரெடிமேட் நகைகளை மட்டுமே வாங்க முடியும்.

16. வைரம், அன்கட்வைரம், ஆண்டிக், ரூபி எமரால்டு, ஆண்டிக் போன்ற சிறப்பு பொருட்களுக்கு வாடிக்கையாளர் மதிப்பு கூட்டப்பட்ட கட்டணங்களை (சேதாரம், செய்கூலி, மற்றும் கல் கட்டணம்) செலுத்த வேண்டும்.

17. KYC விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர் ஒரு நாமினியை நியமிக்கலாம். பரிந்துரைக்கப்பட்டவர் 18 வயது பூர்த்தி செய்யவில்லை என்றால் விண்ணப்பப் படிவத்தில் பாதுகாவலரின் பெயர் மற்றும் உறவைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும்.

18. இத்திட்டம் முதிர்வு நேரத்தில் OTP மூலம் வாடிக்கையாளர் மொபைல் எண் மற்றும் கையொப்பங்கள் சரி பார்க்கப்படும்.

19. இத்திட்டத்தை வாடிக்கையாளர் வேறு எந்த நபருக்கும் (அல்லது) உறவினர்களுக்கும் மாற்ற முடியாது.

20. முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் உடனடியாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

21.வாடிக்கையாளருக்கு பாஸ் புத்தகம் இழப்பு ஏற்பட்டால் உடனடிாக நிறுவனத்திற்கு தெரிவித்து, அதற்குரிய KYC விவரங்களுடன் புதிய பாஸ் புத்தகத்தை பெற்று கொள்ளவும்.

22. இந்த தங்க விதை அறுவடை திட்டத்தை வேறு திட்டங்கள், திருவிழா சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் இணைக்க முடியாது.

23. தங்கத்தின் மார்க்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது.

24. எந்த நேரத்திலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றம் செய்ய நிறுவனத்திற்கு உரிமை உண்டு. சர்ச்சைகள் ஏதேனும் இருந்தால் தேவகோட்டை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

GOLDEN MONEY HARVEST SCHEME

1. இத்திட்டத்தின் கீழ் ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் சேர்த்து தங்கநகைகள் பெறலாம். நீங்கள் ஒரு தொகையை மாதந்திர தவணையாக தேர்வு செய்து கொள்ளவும். ரூ. 500, 1000, 2000, 3000, 5000, 10000, 20000, 30000, 50000/- இத்திட்டத்தில் வாடிக்கையாளர் அனைவரும் கட்டும் தவணையை தொகையாக வரவு வைக்கப்படும்.

2. இத்தங்க பண அறுவடை திட்டத்தின் கீழ் நீங்கள் தேர்வு செய்யும் மாதந்திர தவணையை ஒரு தொகையாக மட்டுமே வைக்கப்படும்.

3. ஒவ்வொரு தவணைக்கும் இடையே உள்ள மாதந்திர தவணை இடைவெளி 30 நாட்கள் இருக்க வேண்டும்.

4. இத்திட்டத்தில் இணைந்த தேதியிலிருந்து 11 மாத தவணை முடிந்த பிறகுதான் முதிர்ச்சியடையும்.

5. 11வது மாத தவணை முடிந்த பிறகு 30 நாட்களுக்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க முடியும்.

6. இத்திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் வாடிக்கையாளர்கள் கட்டிய தொகைக்கு நிகரான தங்க நகைகளை 100% சேதாரம், செய்கூலி இல்லாமல் (போனஸ் இல்லாமல்) அன்றைய மார்கெட் விலைக்கு பெற்றுக் கொள்ளலாம். மற்றும் GST வரி செலுத்த வேண்டும்.
(அல்லது) வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டிய பணத்திற்கு 1 மாத போனஸ் சேர்த்து தங்கநகைகளாக அன்றைய விலைக்கு பெற்று கொள்ளலாம் மற்றும் அதற்கு சேதாரம், செய்கூலி மற்றும் GST வரி செலுத்த வேண்டும்.

7. இத்திட்டத்தில் கட்டிய தொகைக்கு நிகரான எடைக்கு மேல் நகை தேர்வு செய்யும் பட்சத்தில் அதற்குரிய சேதாரம், செய்கூலி மற்றும் GST வரி செலுத்த வேண்டும்.

8. முதல் கட்டணத்தின் போது தவணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டு பின்னர் மாற்ற முடியாது. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த தொகையை 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.

9. வாடிக்கையாளர்கள் முதிர்வு தேதிக்கு முன் விலக விரும்பினால் வாங்கும் தேதியில் மட்டுமே மார்க்கெட் விலை நிர்ணயிக்கப்படும் மற்றும் வாடிக்கைளார்களுக்கு திட்ட பலன்கள் வழங்கப்படாது. மேலும் பணமாக திரும்ப பெற இயலாது.

10. வாடிக்கையாளர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி 3% GST வரி செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அரசாங்க வரி விதிப்பு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

11. 11 மாத தவணைகளின் மதிப்பு ரூ.2,00,000 மேல் இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் PAN எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

12. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டும் தொகைக்கு தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு போனஸ் வழங்கப்படாது.

13. பதிவு செய்யும் போது யாருடைய பெயரை பதிவு செய்கிறாரோ அவர் மட்டுமே இத்திட்டத்தை முடிக்க முடியும். திட்டத்தில் பதிவு செய்த நபர் முடக்கப்பட்டிருந்தால் அல்லது காலாவதியாகிவிட்டால், நாமினி உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய அடையாளச்சான்றுகளைச் சமர்ப்பித்து திட்டத்தைப் பெற்றுக்கொள்ளாலாம்.

14. இத்திட்டத் தொகையை தங்கம் அல்லது வெள்ளி நகைகளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் திட்டத் தொகை எந்த சூழ்நிலையிலும் பணமாக வழங்கப்படாது. இத்திட்டத்தின் கீழ் ரெடிமேட் நகைகளை மட்டுமே வாங்க முடியும்.

15. வைரம், அன்கட்வைரம், ஆண்டிக், ரூபி எமரால்டு, ஆண்டிக் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளி செட்டிநாட்டு பாத்திரங்கள். வெள்ளி நகைகள் போன்ற சிறப்பு பொருட்களுக்கு வாடிக்கையாளர் மதிப்பு கூட்டப்பட்ட கட்டணங்களை (சேதாரம், செய்கூலி, மற்றும் கல் கட்டணம்) செலுத்த வேண்டும்.

16. KYC விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர் ஒரு நாமினியை நியமிக்கலாம். பரிந்துரைக்கப்பட்டவர் 18 வயது பூர்த்தி செய்யவில்லை என்றால் விண்ணப்பப் படிவத்தில் பாதுகாவலரின் பெயர் மற்றும் உறவைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் மற்றும் கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும்.

17. இத்திட்டம் முதிர்வு நேரத்தில் OTP மூலம் வாடிக்கையாளர் மொபைல் எண் மற்றும் கையொப்பங்கள் சரி பார்க்கப்படும்.

18. இத்திட்டத்தை வாடிக்கையாளர் வேறு எந்த நபருக்கும் (அல்லது) உறவினர்களுக்கும் மாற்ற முடியாது.

19. முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் உடனடியாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

20. வாடிக்கையாளருக்கு பாஸ் புத்தகம் இழப்பு ஏற்பட்டால் உடனடிாக நிறுவனத்திற்கு தெரிவித்து, அதற்குரிய KYC விவரங்களுடன் புதிய பாஸ் புத்தகத்தை பெற்று கொள்ளவும்.

21. இந்த தங்க பண அறுவடை திட்டத்தை வேறு திட்டங்கள். திருவிழா சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் இணைக்க முடியாது.

22. தங்கத்தின் மார்க்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது.

23. எந்த நேரத்திலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றம் செய்ய நிறுவனத்திற்கு உரிமை உண்டு. சர்ச்சைகள் ஏதேனும் இருந்தால் தேவகோட்டை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

Contact Info

Scroll to Top